"காதல் கொண்ட காகம் ஒன்று"

வீட்டுக்கு வீடு
குடை வந்த போதிலும்,
சோம்பேறித்தனத்தின் இலக்கணமாய் 
கலட்டிவைக்கப்படாத ஆன்ட்டனாக்கள்,
நீ கரைய ஏதுவாய்...

மாம்.,
என்னவென்று கரைகிறாய்...??
'ஏன் நான் கருப்பாய் பிறந்தேன் என்றா..??'
கிளியின் மீது காதல் கொண்டாயோ...??
இப்படி நிதம் நிதம் கரைந்து புலம்புகிறாய் ..!
தப்பில்லை காகத்தாரே...

னால்., 
பிறிதொரு இடம் சென்று புலம்பு..
ஏனென்றால்,
இங்கு புலம்ப நான் இருக்கேன்...
"அடி கிளியே, நீ எங்க போன..??

"வழிப்பறி"

முதன் முதலாய்
வெயில் பூத்த சாலையொன்றில்
தான் உனைப்பார்த்தேன்,
ஒரு நொடியிலே  
என் இதயத்தை வழிப்பறி செய்து போனாய்...!
இன்று தேடினாலும் கிடைக்காத
தொலைந்து போன நிமிஷமாய் நீ...!
இதயமின்றி வாழும் இயந்திரனாய் நான்...!

"மழையழகி"

மழையழகி.,
உன்னை ரசித்துக்கொண்டே இருப்பேனடி...!
இலை நுனியில் ஒரு துளி உலகமாய்
நீ எடுத்த அவதாரம் அழகு;
தெருவினில் சிறுவர்கள் கப்பல் விட்டு மகிழ
சிறு நதி செய்தாய்- அது அழகு;
கல்லூரிக் காலத்தில் 
அவளது குடையின் கீழ் தஞ்சம் தரச்செய்தாய் 
கோடி அழகு, அது உந்தன் கொடை அழகு;
சேர் நிரம்பிய சாலை அழகு;
சன்னல் ஓரச் சாரல் அழகு; 
கேடயம் தூக்கும் காளான்படை அழகு;
பறவையில்லா வானம் சிறு திரிஷ்ட்டிப்பொட்டோ..?
அவளின் கொலுசொலியை நினைவூட்டும்
ஜல் ஜல் சப்தம் அழகு;
 
கொடியிலிருக்கும் துணியை
அவசர அவசரமாய் அள்ளிச்செல்லும் தாவணிப்பெண்
அழகோ அழகு;
முதல்த்துளி 
காதலியின் இதழில் முத்தமிட்டு
சந்தோசத்தில் துள்ளித்தெறிக்கும் நொடி அழகு;  
குடிசை
க்கூரை வழி 
எட்டிப்பார்க்கும் விறகடுப்புப் புகை அழகு;  
மேகம் அழகு;
மின்னல் அழகு;
இடித்தாளம் அழகு; 

மண்வாசம் அழகு;
மேகத்தின் மை பூசிய வேஷம் அழகு;
 
முழுமையும் அழகு;
முற்றிலும் அழகு;

மொத்தத்தில்  
நீயென்றால்
தனிஅழகு;
எந்தன்
ஏகாந்த மழையழகி...!

 எண்ணமும் எழுத்தும் >>தீஸ் பழனி<<

எந்தன் உமை நீ தானே...!





















காதலே..!
உன்னை தேகம் நணைத்த மழையென்பேனா..?
இல்லை சுவாசம் ஒவ்வாப் புகையென்பேனா..?
என் தேவதேவியே..!
என்னில் பாதி நீ என்பதால்

நான் சிவனார் ஆயினேன்...
இந்த தேவநிலை
நூறு ஜென்மம் நிலைத்திடவே 
எமனாரைத்தான் வேண்டினேன்...
கண்ணே..!
என் தேவதேவி.,
களங்கமில்லாக் காதல் தேவி.,
என்னில் உமை நீ தந்துவிட்டதால்
எந்தன் உமை நீ தானே...!

எண்ணமும் எழுத்தும் >>தீஸ் பழனி<<

"மரணவேசி"

















'என் மேல் உனக்கு உரிமையில்லை'
என்று நீ சொன்ன பிறகு
நான் மரணவேசியை
முத்தமிட ஆசைகொண்டேன்...
அக்கணம்,
அந்த ஆசை தவறென சொல்வதற்கு மட்டும்
நீ எவ்வாறு உரிமை கொண்டாய்..?
பதிலுக்கு.,
வெறும் நண்பன் என்கிறாய், நயவஞ்சகி...

எண்ணமும் எழுத்தும் >>தீஸ் பழனி<<

"கவிதை மகள்"























நான் -
உன் மனதில்
வேண்டாத துருவாகினேன்...
நீ  -
என் ஒவ்வொரு கவிதைக்கும்
கருவாகினாய்...
என் கவிதை மகளே..!




எண்ணமும் எழுத்தும் 
  >>தீஸ் பழனி<<

"பயித்தியகாரத்தனமான பதிவுகள்- பகுதி 2"


"பொய்கள்"


















நான்:
உன் பேர் எழுதும்பொழுது மட்டும்
'காகிதக் காதலனை 
முத்துக்களாய் முத்தமிடுகிறாள் 
எனதருமைப் பேனாப்பெண்'
அந்த எழுத்துக்கள் தேனீக்களாய் மாறி
நம் காதலைப் பாடுகிறது மெல்லிய ரீங்காரமாய்
தேனீக்கள் எங்கிருந்து வந்தன...?
தெரியவில்லையடி
'பனிப்பூவைப்  போல தேன் சுரக்கிறது 
உன் பெயர் சொல்லும் எழுத்துக்கள்'
ஆகையால் தான்
எறும்புகள் மொய்கின்றனவோ...??
ஐய்யஹோ
வலிக்குமே என் செல்லத்திற்கு...
எனவே,
'வெண்மயில் பீலிகையைத் தேடினேன் 
வன்மையான நாளிகையைச் சாடினேன்'
கவலை வேண்டாமென் காதலியே
நான் விசுறுகிறேன்
நீ துயில்தேசம் போ  
அங்கேயும் நான் தான் இருப்பேன்  
என் காதலியே  
இப்போது புரிகிறதா  
உன் பெயருக்கு நான் விசிறிவிட்ட காரணம்...?




நீ: 
டே லூசாடா நீ..? என் பேருக்கு விசிறிவிடுவியா...?
மொதல்ல எனக்கு விசிறிவிடு 
கவிதை எழுத சொன்ன மொக்கா போடுறியா..?
உன்ன கொல்லப்போறேன்...

எனக்கு ஒரு சந்தேகம் 
இப்போ நான் சொன்னது கவிதையா...?
இல்ல அவ சொன்னது கவிதையா...?  
இல்லனா அவ சொன்னதால அது கவிதைமாதிரி தெரியுதா...?
சத்தியமா அவ சொன்னதுதான் கவிதை 
வேணாம்ப்பா இத சொன்னா
மறுபடியும் மொக்க போடறான்னு சொல்லுவா... 
    

எண்ணமும் எழுத்தும்  >>தீஸ் பழனி<<

"விழிப்பொறி"

எலிப்பொறியில் சிக்கிய
ஏழை எலியைப்போல்,
உந்தன் விழிப்பொறியில்
விழுந்தேன் நான்...





 எண்ணமும் எழுத்தும்
  >>தீஸ் பழனி<<

"யுகங்களாகும் நொடிகள்"



























நெரிசல் மிகுந்த உன் இதயத் தெருக்களில்
பரிதாபமான ஓர் பாதசாரியாய் நான்;
நீ
'நில்' என்றாய் நிற்கிறேன்
...
என் காதலுக்கு
எப்பொழுது காட்டுவாய் பச்சை விளக்
கு..?
உன் மௌனத்தின்
ஒவ்வொரு நொடியும்
யுகங்களாகிறதடி...






எண்ணமும் எழுத்தும்
  >>தீஸ் பழனி<<

"விதிப்பெண்"






















விதியைக் கூட
பெண்ணென்றுதான்
சித்தரிக்க தோண்றுதடியெனக்கு;
என் வாழ்க்கையையே மாற்றிச்சென்றதால்...





எண்ணமும் எழுத்தும் 
   >>தீஸ் பழனி<<

"ஏகாதிபத்திய ராணி"






















என் எண்ணதேசங்களை அபகரித்த
ஏகாதிபத்திய ராணியே..!
உன் ஆயுட்கால அடிமை நான்...





எண்ணமும் எழுத்தும்  
    >>தீஸ் பழனி<<

"பயித்தியகாரத்தனமான பதிவுகள்- பகுதி 1"

"கனவில் விழுந்ததடி மண்"

















காலர் டியூன் இல்லாத
வழக்கமான ட்ரிங் ட்ரிங் சத்தம்:
'ஹாய் நித்தி, engagement ஆய்டுசாமே,
கங்ராட்ஸ் டி'
'ஹே தேங்க்ஸ் டா, நீ தான் first wish பன்ற,
i like u so much டா'
'ஹ்ம்ம் lil busy yaar cal u later, take care'
'சரி டியர், bye'
இணைப்பு துண்டிக்கப்பட்டவுடன் தோன்றியது..


            "என் கனவில் விழுந்ததடி மண்
              ஒரு சின்ன சந்தேகம்,
கனவு எங்கே பிறக்கிறது..?
தலையிலா..?
அப்போ அங்கேயும் மண் தான் இருக்குமா..?
என் கனவில் விழுந்ததடி மண்" 

 >>>புலம்ப வச்சிடாலே மச்சான்<<<
 
  
எண்ணமும் எழுத்தும் 
    >>தீஸ் பழனி<<
  

"மழை செய்த பிழை"






















என்னவள்
வரைந்த அரிசிமாக்கோலத்தை,
ஏனடி அ
ழி
த்துச்சென்றாய்..?
ரசனையில்லா மழைப்பெண்ணே... 





எண்ணமும் எழுத்தும்  
    >>தீஸ் பழனி<<

"தனியன்"


கண்ணீரினால் ஓர் மாளிகை அமைத்து,
அதில்,
நான் மட்டும் தனியாய்;

உன்னை நினைத்து...






எண்ணமும் எழுத்தும் 
   >>தீஸ் பழனி<<

"மாமகிழ்ச்சி"
















மழைப்பார்த்துத் தோகை விரித்தாடும்
மயில் போல நானும்,
மாமகிழ்ச்சி கொண்டேன்;
சிலையே, நீ எனைப் பார்த்த பொழுது...









எண்ணமும் எழுத்தும் 
     >>தீஸ் பழனி<<

"பதிலறியா முட்டாள் நான்"























உருக்காலை இரும்பாக
உருகித்தான் போனதடி
என் நெஞ்சம்.,
ஆயினும் சிலையானால்
உந்தன் உருவை பிரதிபலிப்பேன்...
ஏனென்று கேட்காதே,
பதிலறி
யா
முட்டாள் நான்... 



எண்ணமும் எழுத்தும் 
   >>தீஸ் பழனி<<

"காதல் தேவி"

















காகிதக் கப்பலேறி
கடல் நெடுகப்பயணம் சென்றேன்
கடற்க்கன்னி காண சென்றேன்
காதல் தன்னைக் கூற சென்றேன்
மழைப் பெண்ணும் பூக்கள்
தூவி மனமார வரவேற்றாள்;
காற்றுப் பெண் இசைமீட்டி
காதோரம் பாடிச் சென்றால்;
குளிர்ப் பெண்ணோ கட்டியணைத்தால்
மழைப் பெண்ணின் வருகை கண்டு;
நிலவுப் பெண் கர்வமுற்றால்
குளிர்ப்பெண்ணின் விஷமத்தால்;
இத்தனை பெண்கள் கண்டேன்
எனக்கான பெண் எங்கே..?
எந்தன் ஆசைக்கடற்கன்னி..!





 












மெல்லிய அலை நிலை மாறிப்போனதால்
கடல் பெண்
சலனமுற்று
என்கப்பல் அங்குமிங்கும் ஆடச் செய்தால்
நிலைகுலைந்த காகிதப் பெண்
நிதர்சனமாய் மூழ்கிப்
போனால்,
நானும் ஆங்கே இறந்து போனேன்
கனவில் எந்தன் கன்னியோடு,
காகிதத்தில் பொறித்திருந்த
காதல் கொஞ்சும் வரிகள் கண்டு,
அங்குமிங்கும் தேடிப் பார்த்தால்
எந்தன் ஆசைக் கடற்கன்னி...
ஆங்கே.,
எந்தன் உயிரற்ற உடல்கண்டு
ஓயாமல் அழுதுபுலம்ப
கடல் நீரும் பெருகிப் போச்சே
கண்ணே உன் கண்ணீரால்...
அழுதழுதே மாண்டுபோனால்
ஐய்யஹோ.,
என் காதல் தேவி
என்னால் தான் மரித்துப்போனாள்
ஆவியாய் நான் புலம்பி நின்றேன்,
சொர்கச்சாவியாய் கடற்கன்னி- நீ 
என்னருகே வந்ததென்ன..??
எந்தன் மகிழ்ச்சிக்கோ எல்லையில்லை
"நம் உடல் கடந்த காதல் வாழ்க"
என்று கதைத்து சொர்க்கம் சென்றோம்...  








எண்ணமும் எழுத்தும்
   >>தீஸ் பழனி<<

"தாத்தாப் பூ"



























நாம் பழகிய பால்ய நாட்கள்
நினைவிருக்கிறதா உனக்கு...??
நிச்சயமாய் நினைவிருக்காது,
நீயுமோர்  பெண் தானே.
சரி,
சொல்கிறேன் கேள்.,
உனக்கு தாத்தா பூ என்றால் மிகவும் பிடிக்கும்
அதனால் எனக்கும் கூட பிடித்துப் போனார் தாத்தா
பூவைக் கையிலேந்தியபடி நீ
"தாத்தா காசு குடு, இல்லாட்டி உன் தலைய வெட்டிருவேன்"
"குடுக்க முடியாது போ"
 மீண்டும் நீ, தாத்தாவின் குரலில்.
"இப்போவே உன் தலைய வெட்டுறேன் பாரு"
என்று கொஞ்சல் மொழியுடன்
தாத்தாவின் தலை கொய்வாய்;
உனக்கு பிடிக்குமென்று
நான் கூட இப்படிச் சில
கொலைகளைச் செய்ததுண்டு:
இப்பவாச்சி ஞாபகமிருக்கா..??
இருந்தாலும் இல்லையென்று
தானா சொல்லப் போகிறாய் 
அழகிய பொய்காரி. 






எண்ணமும் எழுத்தும் 
    >>தீஸ் பழனி<<










புகைப்படம் எப்படி இருக்கு..?? இந்த பதிவுக்காகவே எடுத்ததுங்க...

Golden words...

"Wen is c able 2 cum in ma dream n stop ma temporary death..?? y is c refusin 2 cum in ma lyf n stop ma permanent death...??"
-Sathish Chakravarthy...

காலச்சுழற்சி...

வழிப்போக்கர்கள்......

Tamil Blogs & Sites
Tamil 10 top sites [www.tamil10 .com ]
copyrighted to sathish palani ® █║▌│█║▌│█││█║▌║.... Powered by Blogger.