"காதல் தேவி"

















காகிதக் கப்பலேறி
கடல் நெடுகப்பயணம் சென்றேன்
கடற்க்கன்னி காண சென்றேன்
காதல் தன்னைக் கூற சென்றேன்
மழைப் பெண்ணும் பூக்கள்
தூவி மனமார வரவேற்றாள்;
காற்றுப் பெண் இசைமீட்டி
காதோரம் பாடிச் சென்றால்;
குளிர்ப் பெண்ணோ கட்டியணைத்தால்
மழைப் பெண்ணின் வருகை கண்டு;
நிலவுப் பெண் கர்வமுற்றால்
குளிர்ப்பெண்ணின் விஷமத்தால்;
இத்தனை பெண்கள் கண்டேன்
எனக்கான பெண் எங்கே..?
எந்தன் ஆசைக்கடற்கன்னி..!





 












மெல்லிய அலை நிலை மாறிப்போனதால்
கடல் பெண்
சலனமுற்று
என்கப்பல் அங்குமிங்கும் ஆடச் செய்தால்
நிலைகுலைந்த காகிதப் பெண்
நிதர்சனமாய் மூழ்கிப்
போனால்,
நானும் ஆங்கே இறந்து போனேன்
கனவில் எந்தன் கன்னியோடு,
காகிதத்தில் பொறித்திருந்த
காதல் கொஞ்சும் வரிகள் கண்டு,
அங்குமிங்கும் தேடிப் பார்த்தால்
எந்தன் ஆசைக் கடற்கன்னி...
ஆங்கே.,
எந்தன் உயிரற்ற உடல்கண்டு
ஓயாமல் அழுதுபுலம்ப
கடல் நீரும் பெருகிப் போச்சே
கண்ணே உன் கண்ணீரால்...
அழுதழுதே மாண்டுபோனால்
ஐய்யஹோ.,
என் காதல் தேவி
என்னால் தான் மரித்துப்போனாள்
ஆவியாய் நான் புலம்பி நின்றேன்,
சொர்கச்சாவியாய் கடற்கன்னி- நீ 
என்னருகே வந்ததென்ன..??
எந்தன் மகிழ்ச்சிக்கோ எல்லையில்லை
"நம் உடல் கடந்த காதல் வாழ்க"
என்று கதைத்து சொர்க்கம் சென்றோம்...  








எண்ணமும் எழுத்தும்
   >>தீஸ் பழனி<<

"தாத்தாப் பூ"



























நாம் பழகிய பால்ய நாட்கள்
நினைவிருக்கிறதா உனக்கு...??
நிச்சயமாய் நினைவிருக்காது,
நீயுமோர்  பெண் தானே.
சரி,
சொல்கிறேன் கேள்.,
உனக்கு தாத்தா பூ என்றால் மிகவும் பிடிக்கும்
அதனால் எனக்கும் கூட பிடித்துப் போனார் தாத்தா
பூவைக் கையிலேந்தியபடி நீ
"தாத்தா காசு குடு, இல்லாட்டி உன் தலைய வெட்டிருவேன்"
"குடுக்க முடியாது போ"
 மீண்டும் நீ, தாத்தாவின் குரலில்.
"இப்போவே உன் தலைய வெட்டுறேன் பாரு"
என்று கொஞ்சல் மொழியுடன்
தாத்தாவின் தலை கொய்வாய்;
உனக்கு பிடிக்குமென்று
நான் கூட இப்படிச் சில
கொலைகளைச் செய்ததுண்டு:
இப்பவாச்சி ஞாபகமிருக்கா..??
இருந்தாலும் இல்லையென்று
தானா சொல்லப் போகிறாய் 
அழகிய பொய்காரி. 






எண்ணமும் எழுத்தும் 
    >>தீஸ் பழனி<<










புகைப்படம் எப்படி இருக்கு..?? இந்த பதிவுக்காகவே எடுத்ததுங்க...

"நிலவுக் காதலன்"






















உலாவும் நிலவுப் பெண்ணே,
உன் மேல்
உரிமைகொள்ள
நினைத்ததென்தவறு
பௌர்ணமியாய் பல்லைக் காட்டிவிட்டு,
படிப்படியாய் மறைந்ததென்ன..??
ப்ச்சு...
அமாவாசை
ஆனதேன்னவோ நான் தானடி
நிலவுப் பெண்ணே...!





 எண்ணமும் எழுத்தும் 
     >>தீஸ் பழனி<<

"மரண ரணம் "






















நீ என்னை
பிடிக்கவில்லையென்று சொன்ன பொழுது கூட
நான் வருந்தவில்லை;
ஆனால்,
'SMS' அனுப்பி
நலம் விசாரித்ததற்கு
'who are you' என்று
மறுமொழிந்த பொழுது
இறந்தே போனேனடி.
 
உன் நினைவுப் பக்கங்களில்,
கிழித்துக் கசக்கித் தூக்கியெறிந்த
காகிதமாய் கூட நான் இல்லையோடி..??

அந்த கசங்கிய காகிதத்தில்
ஒரு காதல் கவிதையிருப்பதை
படிக்க மறந்ததேனடி
தேவதைப் பெண்ணே..??




எண்ணமும் எழுத்தும் 
  >>தீஸ் பழனி<<

"மழை வேண்டித் தவமிருந்தேன்"





















மழை வேண்டித் தவமிருக்கும்
முனிவன் போல்,
கடிதத்திற்கு பதில் வேண்டி
காத்திருந்தேன்;
அடைமழை தான் வரவில்லை,
அட்லீஸ்ட்.,
ஒரு தூரல் மழையாவது வந்திருக்கலாம்
அதுகூட வரவில்லை...
ஆதலால்.,

என் காதலெனும் ரோசாச் செடி
காய்ந்து மாய்ந்தே போனதடி,
முட்கள் மட்டும் மிச்சமுண்டு..
என்றாவது ஒரு நாள் மழை வருமா..??
துளிர் விடுமா..??
மழை வேண்டித் தவமிருந்தேன்...




எண்ணமும் எழுத்தும்
  >>தீஸ் பழனி<<

Golden words...

"Wen is c able 2 cum in ma dream n stop ma temporary death..?? y is c refusin 2 cum in ma lyf n stop ma permanent death...??"
-Sathish Chakravarthy...

காலச்சுழற்சி...

வழிப்போக்கர்கள்......

Tamil Blogs & Sites
Tamil 10 top sites [www.tamil10 .com ]
copyrighted to sathish palani ® █║▌│█║▌│█││█║▌║.... Powered by Blogger.