"கலாபம் தந்த வரம்"


நீயும் நானும்...
எதிரெதிரே,
உனை கண் கொட்டாமல் பார்த்த நான்
எங்கோ பார்த்துச் சென்ற நீ
கடிகார முள்ளைப் போல்
உனை கடந்து சென்ற அத்தருணத்தில்,
உன் துப்பட்டா
எனும் கலாபம் 
என் முகம் வருடி
ச்சென்றது.
'ஹா இது போதும் இந்த பிறவி வாழ..
நீ யாரை வேண்டுமானாலும் மணந்து கொள்
உன் நினைவுகள் மட்டும் போதுமடி எனக்கு'
என் இதயத்தின்
ஒவ்வொரு துடிப்பிலும்
வாழ்வது நீ மட்டுமே,
உனை ரசித்த
கல்லூரி நாட்கள் மட்டும்
வந்து வந்து போகுதடி கண்முன்

உயிர் வாழும் ஒவ்வோர் நொடியிலும்...

  


எண்ணமும் எழுத்தும் 
    >>தீஸ் பழனி<<

"நீ கொடுத்த தேநீரின் சுவை"

 

இரவு எட்டு மணி,
கொலைப்
பசி
'லேட்டாயிடுச்சு சாப்புடு கண்ணு...'
என்ற என் அம்மாவிடம்
'வேண்டாம்மா' என்றேன்...

சற்று நேரத்திற்கு முன்:
'வா ஷதீஸ், பஸ்ட் டைம் வீட்டுக்கு வந்திருக்க..
சாப்டுட்டு தான் போகனும்'
என்றவளிடம்
'இல்ல நித்யா ஒரு டீ மட்டும் போதும்'
என்றுரை
த்தேன்...
ரசித்துக் கொண்டே குடித்தேன் 
அவளையும் அவளது தேநீரையும்
வார்த்தையால் பேசாமல் 
மௌனத்தாலும் விழிகளாலும் பேசி முடித்த பின்
'கேளம்பறேன்'  என்றேன்
'அதுக்குள்ளே என்ன அவசரம்..? 
சரி அடிக்கடி வரணும்'  என்ற 
அவளின் பெற்றோரிடம் சொல்லிவிட்டு
அவளது கண்களையே பார்த்து விடை பெற்று
பைக்கில் சென்ற பொழுது தோன்றிய கவிதை...

"நீ கொடுத்த தேநீரின் சுவை மட்டும்,
அப்படியே உள்ளதடி என் நாவில்;
மரணம் வரையில்,
சுவைத்துக்கொண்டே இருக்க தூண்டுதென்
மனம்
ஆதலால் நீயென் மனைவியாவாயா..??" 


சுவையைச் சேகரித்துப் பசியுடனே தூங்கிப்போனேனடி
பாவைப் பெண்ணே...

எண்ணமும் எழுத்தும் 
    >>தீஸ் பழனி<< 


"காதல் சாத்தானே..!"

உந்தன் கண்மையை நினைவுப்படுத்தும்
ஓர் மைசூழ்  இரவு,
கள்வர்கள் நிலவினைக் கவர்ந்தது சென்றிருக்கக் கூடும்
என்ற ஐயத்தை எழுப்பும்
ஓர் கார்கூந்தல் இரவு,
அப்படியோர் மயான நிசப்த்த இரவில்  
என் நித்திரையில்லா விழிகளின்
கருமணியிநூடே;
உற்றுப்பாரடி காதல் சாத்தானே...
உந்தன் உருவம் தெரியும்:
ஆங்கே உருவெடுக்கும் கண்ணீரின்
திரவப்பாதை
என் கன்னங்களில்
உந்தன் பெயரைக் கிறுக்கிச் செல்லும்
எனக்காக ஒன்றே ஒன்று செய்
என்னை ஏற்றுக்கொள்...
அல்லது,
மாய்த்துக்கொல்...

எண்ணமும் எழுத்தும் 
    >>தீஸ் பழனி<<

"முற்றிலுமான பொய்கள்"என்ன சொன்னாலும் ரசித்தாய்
தவறாமல் சிரித்தாய்
'ம்ம் அப்புறம் என்ன ஆச்சு'
என்று கொஞ்சிய பெண்மையை ரசித்தேன்...
கண்மணியே.,
உன்னிடம் நான் சொன்னதென்னவோ,
முற்றிலுமாய் பொய்கள் மட்டுமே...


எண்ணமும் எழுத்தும்
    >>தீஸ் பழனி<<

"அவள் பெயர் - நிஷா"
சூறாவளியில் சேதமடைந்த
நெற்பயிரடி நான்,
வளர்த்த பயிரின் நிலைகண்டு
கலங்கி நிற்கும் ஏழை விவசாயி என் தந்தை...
என்ன ஒரு ஒற்றுமை,
அந்த சூறாவளி
க்கும் உனக்கும்
பெயரென்னவோ ஓன்றுதானடி பெண்ணே...

தென்றலாய் இருந்த நீ 
சூறாவளியாய் ஆனதேனடி..??


     


எண்ணமும் எழுத்தும் 
   >>தீஸ் பழனி<<

"தேடல் மாறிப்போனதென்ன"

முதல் நாள் கல்லூரி-
'நீ என்ன ஆக
ப் போகிறாய்..?'
என்ற விரிவுரையாளரின் கேள்விக்கு
விடையளி
த்தேன்,
'நான் ஒரு சிறந்த பொறியாளன் ஆவேன் என்று...'
உனை
ப் பார்த்த பிறகு தான் நினைதேன்,
'இவளுக்கு என்னவாய் ஆகபோகிறோம்' என்று
அடி தேவதைப்  பெண்ணே.,
இப்படியென்,
தேடலையே மாற்றிபோனதென்ன..! 


 எண்ணமும் எழுத்தும் 
  >>தீஸ் பழனி<<

"என் காதலை வலுப்படுத்தும் அந்த ஒற்றை நொடி"


நான் 'உன்னை பார்கிறேனா..?'
என்று 
நீ  ஓரக் கண்ணால் பார்க்கும்.,
அந்த ஒரு நொடி,
என் காதலை
மேலும் வலுப்படுத்துகிரதடி... 


எண்ணமும் எழுத்தும் >>தீஸ் பழனி<<

"சைடு மிரர் காதல்"
புதிதாய் வாங்கிய வாகனம்,
'ஸ்டைல்' என்று சொல்லி
சைடு மிரர்' ஐ
கலட்டி
யெரிந்தேன்...
ஸ்கூட்டியில் சென்ற
உன்னை
பார்த்தபின்பு தான் தோன்றியதெனக்கு,
சைடு மிரர் தான் ஸ்டைல் என்று...
நீ முறைத்துப் பார்த்த
சைடு மிரர்'ஐ
மும்மரமாய் 
துடைதுக்கொண்டிருபேன்
அதிகாலைகளில்...
 
எண்ணமும் எழுத்தும் 
>>தீஸ் பழனி<<

"ஒரு வண்ணத்து ப்பூச்சியின் புலம்பல்"படபடத்தபடி சாலையைக் கடந்தேன்...
பவ்யமாய் 'SCOOTY'இல்  வந்த பட்டாம் பூச்சியைப் பார்த்து.,
இவளை முத்தமிட்டே தீர வேண்டும் என்ற ஆசையில் படபடத்தேன்,
அஹா.,
அவள் கன்னத்தில் என் வண்ணம்...
அய்யஹோ.,
மெல்லிதழ் கிளிந்தபடி நான்...
இனியெப்படிப் படபடப்பேன்..??
'இந்த பொண்ணுங்களே இப்படி தான் எசமான்'
இப்படிக்கு.,

நெடும்சாலை வண்ணத்துப்பூச்சி.


எண்ணமும் எழுத்தும்
>>தீஸ் பழனி<<இவன்.,
பெண்களால் பாதிகப்பட்ட
வண்ணதுப்பூ
ச்சிகளுக்கு
ஆதரவளிக்கும்
அப்பாவி ஆண்.

'நாட் ரீச்சபுல்' காதலி...


அழைத்துப் பார்த்தேன்...
உன் எண்ணிற்கு.,
'நாட் ரீச்சபுல்' என்று வந்தது...
அடி தேவதைப் பெண்ணே..!
எப்போதுமே,
நீ எனக்கு 'நாட் ரீச்சபுல்' தானா...??

எண்ணமும் எழுத்தும் >>தீஸ் பழனி<<

Golden words...

"Wen is c able 2 cum in ma dream n stop ma temporary death..?? y is c refusin 2 cum in ma lyf n stop ma permanent death...??"
-Sathish Chakravarthy...

காலச்சுழற்சி...

வழிப்போக்கர்கள்......

copyrighted to sathish palani ® █║▌│█║▌│█││█║▌║.... Powered by Blogger.