"பொய்கள்"
நான்:
உன் பேர் எழுதும்பொழுது மட்டும்
'காகிதக் காதலனை
முத்துக்களாய் முத்தமிடுகிறாள்
எனதருமைப் பேனாப்பெண்'
அந்த எழுத்துக்கள் தேனீக்களாய் மாறி
நம் காதலைப் பாடுகிறது மெல்லிய ரீங்காரமாய்
தேனீக்கள் எங்கிருந்து வந்தன...?
தெரியவில்லையடி
எறும்புகள் மொய்கின்றனவோ...??
ஐய்யஹோ
வலிக்குமே என் செல்லத்திற்கு...
எனவே,
நான் விசுறுகிறேன்
நீ துயில்தேசம் போ
அங்கேயும் நான் தான் இருப்பேன்
என் காதலியே
இப்போது புரிகிறதா
உன் பெயருக்கு நான் விசிறிவிட்ட காரணம்...?
நம் காதலைப் பாடுகிறது மெல்லிய ரீங்காரமாய்
தேனீக்கள் எங்கிருந்து வந்தன...?
தெரியவில்லையடி
'பனிப்பூவைப் போல தேன் சுரக்கிறது
உன் பெயர் சொல்லும் எழுத்துக்கள்'
ஆகையால் தான்எறும்புகள் மொய்கின்றனவோ...??
ஐய்யஹோ
வலிக்குமே என் செல்லத்திற்கு...
எனவே,
'வெண்மயில் பீலிகையைத் தேடினேன்
வன்மையான நாளிகையைச் சாடினேன்'
கவலை வேண்டாமென் காதலியேநான் விசுறுகிறேன்
நீ துயில்தேசம் போ
அங்கேயும் நான் தான் இருப்பேன்
என் காதலியே
இப்போது புரிகிறதா
உன் பெயருக்கு நான் விசிறிவிட்ட காரணம்...?
நீ:
டே லூசாடா நீ..? என் பேருக்கு விசிறிவிடுவியா...?மொதல்ல எனக்கு விசிறிவிடு
கவிதை எழுத சொன்ன மொக்கா போடுறியா..?
உன்ன கொல்லப்போறேன்...
உன்ன கொல்லப்போறேன்...
எனக்கு ஒரு சந்தேகம்
இப்போ நான் சொன்னது கவிதையா...?
இல்ல அவ சொன்னது கவிதையா...?
இல்லனா அவ சொன்னதால அது கவிதைமாதிரி தெரியுதா...?
சத்தியமா அவ சொன்னதுதான் கவிதை
வேணாம்ப்பா இத சொன்னா
மறுபடியும் மொக்க போடறான்னு சொல்லுவா...
எண்ணமும் எழுத்தும் >>ஷதீஸ் பழனி<<
எண்ணமும் எழுத்தும் >>
9 comments:
காகிதக் காதலன்-பேனாப் பெண்!
நல்ல கற்பனை!
நன்றாக இருந்தது பதிவு!
மிக்க நன்றி நண்பா....
இப்போ நான் சொன்னது கவிதையா...?
இல்ல அவ சொன்னது கவிதையா...?
nalla varigal.......
nandri divya....
gud imagination!!!! nice!!! keep it up frnd !!! really nce..>>>
//// RASITTHA VARIGAL :
எனக்கு ஒரு சந்தேகம்
இப்போ நான் சொன்னது கவிதையா...?
இல்ல அவ சொன்னது கவிதையா...?
இல்லனா அவ சொன்னதால அது கவிதைமாதிரி தெரியுதா...?
சத்தியமா அவ சொன்னதுதான் கவிதை
வேணாம்ப்பா இத சொன்னா
மறுபடியும் மொக்க போடறான்னு சொல்லுவா.
நன்றிய பிரபா... நன்றிங்க anonymous
vaasthuvam thaana..nyayam thaana...
nandrinngg kaarthi....
Post a Comment