"களவு போனதடி எந்தன் கனவு..."


அன்புத்தோழியே..!
களவு போனதடி எந்தன் கனவு...
நீ தான்,
நான் கண்ட இடைவிடாக் கனவு...
சிதறிய இதயம்,
சிணுங்கிய மனது,
கண்ணீரை மறைத்த சிரிப்பு,
அதையும் மீறி எட்டிப்பார்க்கும் ஒரு துளிக் கண்ணீர்...
அது விசமாகத்தான் பட்டது எனக்கு.,
அந்தத் தருணத்தில்...
இதற்காகத்தான் நான் முன்னமே சொன்னேன்.,
உனது திருமண
த்திற்கு நான் வரமாட்டேன்  என்று...
வர்புரித்தினாய் நீ,
மீற முடியாமல் நான்.,
இங்கு பரிதாபமாய்..
தோழியே..
களவு போனதடி எந்தன் கனவு...


எண்ணமும் எழுத்தும் >>தீஸ் பழனி<<

"சிகரெட் புகைகளுக்கு அப்பால்..."


 நீ...
ஓயாமல் ஊதித்தள்ளும்,
சிகரெட்டின் ரசாயன நெடி...
உனது வசமாகவே பதிவானது,
என்னுள்...
எத்தனை முறை சொல்லியிருப்பேன்.,
விட்டுவிடு நண்பா என்று...
கேட்க மறுப்பாய்...
'பிரிந்துவிடு நண்பா உனது சிகரெட் காதலியை'
பலமுறை சொல்லிய நினைவு உண்டு...
உன்னவளின் வார்த்தை கேட்டு ஒரு வார விடுப்பு விடுத்தாய்...
நன்று...
பின்பு மீண்டும் உனது கள்ளகாதல் தொடங்கியது.,
சகா...
சிகரெட் புகைகளுக்கு அப்பால்,
சின்னதாய் ஒரு உலகமுண்டு;
நெடியில்லா உலகம்,
நோய் நொடியில்லா உலகம்...
அங்கு உனது வருகையை பதிவு செய்ய
காத்திருகிறேன்...
இப்படிக்கு.,

உனது அன்பு நண்பன்...

எண்ணமும் எழுத்தும் >>தீஸ் பழனி<<

"மோட்சம்..!"


நேற்று:
அவள் கைவிரல்கள் தீண்டாத.,
எனது காதல் கடிதங்களுக்கு;
என்றுதான் கிடைக்குமோ,
மோட்சம்..?


இன்று:
அவள் கிழித்தெறிந்த.,
எனது காதல் கடிதங்களுகாவது.,
கிடைத்ததே -
மோட்சம்..!

எண்ணமும் எழுத்தும் >>தீஸ் பழனி<<  

"கார்வண்ண தேவதை"என் வாழ்வை ஒளிமயமாக்கி,
ஆயுட்காலம் முழுதும் இருட்படிந்தே கிடக்கும்,
என் வகுப்பு கரும்பலகையே;
நீயும் என் காதலி தான்,

நாம் பிரிந்துவிட்டதால்..!

எண்ணமும் எழுத்தும் 
>>தீஸ் பழனி<<

"இலையுதிர் காலம்"
பூக்கள் பூத்து குலுங்குகின்றன,
எங்கெங்கு காணினும் பச்சை பசேல்.,
வசந்த காலமாம்...
என்செய்தாய் பெண்ணே..?
ஏனோ என் நெஞ்சில் மட்டும்-
இது இலையுதிர் காலமடி...


எண்ணமும் எழுத்தும் >>தீஸ் பழனி<<

"தூரத்துப்பச்சை"கண்மை,
உந்தன் கயளிடம் கண்டேன்..
அது என்னை கொன்றிடும்,
நன்ஜெனச்சென்றேன்..
பெண்ணே நீ,
அக்கரைபச்சையடி... 


எண்ணமும் எழுத்தும் >>தீஸ் பழனி<<

"காதலனாய் வந்த அதிர்ஷ்டக்காரக் கைகுட்டை"கைக்குட்டை என்ன.,
உனது காதலானா
..??
அடிக்கடி முத்தமிடுகிறாய்...


எண்ணமும் எழுத்தும் >>தீஸ் பழனி<<

"கல்லூரி நினைவுகள்"

நூலகத்தில்...
அடுக்கிய நூல்களை கலைத்துக்கொண்டிருன்தேன்.,
'Excuse me' கொஞ்சம் வழி விடுங்க...
திரும்பி பார்த்தேன்..,
அங்கே அவள்..

ஆஹா...
'Excuse me'
எவ்வளவு
அழகான வார்த்தை...
தமிழில் இல்லையோ இத்தனை அழகான வார்த்தை..??


எண்ணமும் எழுத்தும் >>தீஸ் பழனி<<

"காலங்களில் அவள் கார்காலம்"

அது ஓர் மழைக்காலம்:
நான் அவளை முதன் முதலாய் பார்த்தது,
ஓர் அழகிய மழைக்காலம்...
அந்த மழையால்,
எந்தன் இதயமரம் துளிர்
விட்டது
ஓர் காதல் கிளை... 


இடையில் ஓர் வேனில்காலம்:
அது தளராமல்
சிதைத்தவன்,
சூரியச்
சாத்தானோ..??

இன்றைய மழை:
மண் வாசமெல்லாம்..
அவளது வாசமாய்,
எனது சுவாசமாய்,
அடி மனதில்.
இறந்த காதல் மீண்டும் முளைக்கிறது,
மழைக்கால காளானாய்...  


எண்ணமும் எழுத்தும் >>தீஸ் பழனி<<

"காட்சிப்பிழை"நம்மில் பலரையும்.,
ஆட்கொண்டு ஆட்சி செய்யும்,
காட்சிப்பிழை தான்,
காதல்... 


எண்ணமும் எழுத்தும் >>தீஸ் பழனி<<

''கொக்கைன் கண்கள்''

"ஒற்றை பார்வையிலேயே போதையூட்டும், 
கொக்கைன் கண்களடி உனக்கு...
ஆதலால் தான்.,
உன்னை பார்க்கும் பொழுது மட்டும்,
யான் மண்ணைப் பார்க்கிறேன்..."  

  
எண்ணமும் எழுத்தும் >>ஷதீஸ் பழனி<<
 

Golden words...

"Wen is c able 2 cum in ma dream n stop ma temporary death..?? y is c refusin 2 cum in ma lyf n stop ma permanent death...??"
-Sathish Chakravarthy...

காலச்சுழற்சி...

வழிப்போக்கர்கள்......

copyrighted to sathish palani ® █║▌│█║▌│█││█║▌║.... Powered by Blogger.