"காதல் சாத்தானே..!"

உந்தன் கண்மையை நினைவுப்படுத்தும்
ஓர் மைசூழ்  இரவு,
கள்வர்கள் நிலவினைக் கவர்ந்தது சென்றிருக்கக் கூடும்
என்ற ஐயத்தை எழுப்பும்
ஓர் கார்கூந்தல் இரவு,
அப்படியோர் மயான நிசப்த்த இரவில்  
என் நித்திரையில்லா விழிகளின்
கருமணியிநூடே;
உற்றுப்பாரடி காதல் சாத்தானே...
உந்தன் உருவம் தெரியும்:
ஆங்கே உருவெடுக்கும் கண்ணீரின்
திரவப்பாதை
என் கன்னங்களில்
உந்தன் பெயரைக் கிறுக்கிச் செல்லும்
எனக்காக ஒன்றே ஒன்று செய்
என்னை ஏற்றுக்கொள்...
அல்லது,
மாய்த்துக்கொல்...

எண்ணமும் எழுத்தும் 
    >>தீஸ் பழனி<<

4 comments:

வெறும்பய August 27, 2010 at 6:58 PM  

Nice Lines Bro..

• » ѕαктнι « • รค╬ђเรђ ╰» ραℓαηι August 27, 2010 at 7:52 PM  

மிக்க நன்றி bro

பிரபாகரன் பழனிசாமி August 29, 2010 at 5:05 AM  

//என் நித்திரையில்லா விழிகளின்
கருமணியிநூடே;
உற்றுப்பாரடி காதல் சாத்தானே...
உந்தன் உருவம் தெரியும்:
Hot lines !! Keep it up!

//மைசூழ் இரவு,
FANTASTIC SIMILIE! ARumayaana uvamai!

//என் கன்னங்களில்
உந்தன் பெயரைக் கிறுக்கிச் செல்லும்

Excellent!

• » ѕαктнι « • รค╬ђเรђ ╰» ραℓαηι August 29, 2010 at 8:09 AM  

நன்றி பிரபா.... நீ என் நண்பென்ன்டா....

Post a Comment

Golden words...

"Wen is c able 2 cum in ma dream n stop ma temporary death..?? y is c refusin 2 cum in ma lyf n stop ma permanent death...??"
-Sathish Chakravarthy...

காலச்சுழற்சி...

வழிப்போக்கர்கள்......

copyrighted to sathish palani ® █║▌│█║▌│█││█║▌║.... Powered by Blogger.