"சிகரெட் புகைகளுக்கு அப்பால்..."


 



















நீ...
ஓயாமல் ஊதித்தள்ளும்,
சிகரெட்டின் ரசாயன நெடி...
உனது வசமாகவே பதிவானது,
என்னுள்...
எத்தனை முறை சொல்லியிருப்பேன்.,
விட்டுவிடு நண்பா என்று...
கேட்க மறுப்பாய்...
'பிரிந்துவிடு நண்பா உனது சிகரெட் காதலியை'
பலமுறை சொல்லிய நினைவு உண்டு...
உன்னவளின் வார்த்தை கேட்டு ஒரு வார விடுப்பு விடுத்தாய்...
நன்று...
பின்பு மீண்டும் உனது கள்ளகாதல் தொடங்கியது.,
சகா...
சிகரெட் புகைகளுக்கு அப்பால்,
சின்னதாய் ஒரு உலகமுண்டு;
நெடியில்லா உலகம்,
நோய் நொடியில்லா உலகம்...
அங்கு உனது வருகையை பதிவு செய்ய
காத்திருகிறேன்...
இப்படிக்கு.,

உனது அன்பு நண்பன்...

எண்ணமும் எழுத்தும் >>தீஸ் பழனி<<

2 comments:

۞உழவன்۞ July 26, 2010 at 1:27 PM  

வணக்கம் நான் வந்தேன் வரவுக்கு தரவு தந்தேன் நன்றி
உங்கள் ஆக்கங்கள் நன்றாக உள்ளது (வாழ்த்துக்கள்

தீயஷக்தி... August 10, 2010 at 8:01 PM  

மிக்க நன்றி நண்பரே....

Post a Comment

Golden words...

"Wen is c able 2 cum in ma dream n stop ma temporary death..?? y is c refusin 2 cum in ma lyf n stop ma permanent death...??"
-Sathish Chakravarthy...

காலச்சுழற்சி...

வழிப்போக்கர்கள்......

Tamil Blogs & Sites
Tamil 10 top sites [www.tamil10 .com ]
copyrighted to sathish palani ® █║▌│█║▌│█││█║▌║.... Powered by Blogger.