"ஒப்பில்ல உன்னத நண்பன்: நீ"
மதுக்கோப்பை,
உன்னத பாணம்,
அசைவ படையல்,
இவை.,
அனைத்தும் இருக்கிறது...
சமமாய் நிரப்பி தர,
இங்கு நீ இல்லையே நண்பா;
பாதி தூக்கத்தில் உளறாமல் உளறல் செய்ய,
இங்கு நீ இல்லையே நண்பா;
ஒய்யாரமாய் அமர்ந்து ஓயாமல் கின்டல் செய்ய,
இங்கு நீ இல்லையே நண்பா;
நமது சிரிப்பொலி நிறைந்த மேன்சன் சுவர்கள்
இன்னும் அப்படியே தான் இருக்கிறது, 
மற்றொரு நண்பர் கூட்டத்தின் வருகையால்...
அதை கடந்து செல்லும் பொழுது,
எனது தனிமை கண்டு கேலி செய்கிறது...
ஆயிரம் நண்பர்கள் இருப்பினும்
ஒப்பில்லாத உன்னத நண்பன் நீ...
உன்னிடத்தை யாராலும் நிரப்ப இயலாது...
உன்னை நினைக்கையில்,
என்னை அறியாமல் கண்ணீர் வருகிறது...
நட்பின் கண்ணீர்...
நமது பிரிவின் கண்ணீர்...
இனிவரும் நாட்களில்,
இணைவோம் என்ற நினைப்பில் நான்...
இப்படிக்கு.,
உனது நினைவில் வாடும்,
ஓர் ஒப்பில்ல நண்பன்...

எண்ணமும் எழுத்தும் >>தீஸ் பழனி<<

2 comments:

Arun July 4, 2010 at 8:31 PM  

excellent lines,,, just improve by using req. punctuation marks at the end

• » ѕαктнι « • รค╬ђเรђ ╰» ραℓαηι July 7, 2010 at 4:02 AM  

sure da.... tanxxxx.....

Post a Comment

Golden words...

"Wen is c able 2 cum in ma dream n stop ma temporary death..?? y is c refusin 2 cum in ma lyf n stop ma permanent death...??"
-Sathish Chakravarthy...

காலச்சுழற்சி...

வழிப்போக்கர்கள்......

copyrighted to sathish palani ® █║▌│█║▌│█││█║▌║.... Powered by Blogger.