Posted by
தீயஷக்தி...
Sunday, May 23, 2010
மதுக்கோப்பை,
உன்னத பாணம்,
அசைவ படையல்,
இவை.,
அனைத்தும் இருக்கிறது...
சமமாய் நிரப்பி தர,
இங்கு நீ இல்லையே நண்பா;
பாதி தூக்கத்தில் உளறாமல் உளறல் செய்ய,
இங்கு நீ இல்லையே நண்பா;
ஒய்யாரமாய் அமர்ந்து ஓயாமல் கின்டல் செய்ய,
இங்கு நீ இல்லையே நண்பா;
நமது சிரிப்பொலி நிறைந்த மேன்சன் சுவர்கள்
இன்னும் அப்படியே தான் இருக்கிறது,
மற்றொரு நண்பர் கூட்டத்தின் வருகையால்...
அதை கடந்து செல்லும் பொழுது,
எனது தனிமை கண்டு கேலி செய்கிறது...
ஆயிரம் நண்பர்கள் இருப்பினும்
ஒப்பில்லாத உன்னத நண்பன் நீ...
உன்னிடத்தை யாராலும் நிரப்ப இயலாது...
உன்னை நினைக்கையில்,
என்னை அறியாமல் கண்ணீர் வருகிறது...
நட்பின் கண்ணீர்...
நமது பிரிவின் கண்ணீர்...
இனிவரும் நாட்களில்,
இணைவோம் என்ற நினைப்பில் நான்...
இப்படிக்கு.,
உனது நினைவில் வாடும்,
ஓர் ஒப்பில்ல நண்பன்...
எண்ணமும் எழுத்தும் >>
ஷதீஸ் பழனி<<
Posted by
தீயஷக்தி...
"கண்கலின்றி பிறந்திருந்தால்,
உனை கண்டிராமல் இருந்திருபேன்;
உனை கண்டிராமல் இருந்திருந்தால்,
இந்த காதலின்றி பிளைத்திருப்பேன்..."
எண்ணமும் எழுத்தும் >>
ஷதீஸ் பழனி<<
Posted by
தீயஷக்தி...
Friday, May 21, 2010
ஜெர்மானிய மொழியில் ஓர் அழகான கவிதை liebe
Posted by
தீயஷக்தி...
என் வாழ்கையில்...
நீ,
இல்லாவிட்டாலும்
பரவாஇல்லை.
என் கனவில் மட்டும் வந்துவிடடி
மறுக்காமல்..,
எண்ணம் & எழுத்து
"ஷதீஸ் பழனி"
Posted by
தீயஷக்தி...
என் வானமே...
என்றாவது ஒரு நாள்.,
என் மீது பொழிவாயா,
காதல் மழையாக..?
எண்ணமும் எழுத்தும் >>ஷதீஸ் பழனி<<
Posted by
தீயஷக்தி...
Thursday, May 20, 2010
நமது பார்வை, பேச்சு, எண்ணம் இவையே நம்மை தீர்மானிக்கும்....
இவன் >>> ஷதீஸ் பழனி
Posted by
தீயஷக்தி...
எண்ணமும் எழுத்தும் >>ஷதீஸ் பழனி<<
Posted by
தீயஷக்தி...
Wednesday, May 19, 2010
அவள்
என் வலியரியாள்...
இருப்பினும்,
அவள் தான்
என் உயிர்வளியாள்.....
எண்ணமும் எழுத்தும்
>>
ஷதீஸ் பழனி<<
Posted by
தீயஷக்தி...
Thursday, May 6, 2010
விசாலமான வீடு.., அதில் நானும் என் காதலியும் மட்டும் தனியாக... அவளுக்கு துணையாக அவளின் நாணம்.. நீரோடை போன்று தான் சென்று கொண்டிருந்தது எங்களின் வாழ்க்கை..,
அன்றொரு நாள்..,
நிலவில்லாத இருண்ட இரவு, இயந்திரம் எதுவும் இன்றி இயற்கையால் குளிரூட்டப்பட்ட அறை, இருள் என்றால் எனக்கு மிகவும் பிடிக்கும், அவளுக்கு சற்றே பயம். அன்று காலை எங்கள் இருவருக்குள் நிகழ்ந்த ஊடலினால், மாலை நான் வீடு திரும்பியதும் நிலவியது மௌனம் மட்டுமே..., என்றுமே இல்லாத மௌனம் இன்று... சற்றே பயமாக இருந்தது...
முத்த பரிமாற்றங்கள் ரத்து செய்யப்பட்டிருந்தது... தொலைக்காட்சி எதோ குமுறிக்கொண்டிருந்தது, ஆனால் எங்கள் இருவரின் உள்ளக்குமுரலே மிகுதியாய் இருந்தது... மின் விளக்கு அணைந்தது மின்விலக்கால்.... மெழுகுவர்த்தி ஏற்றினால் என் காதலி... மெல்லிய வெளிச்சம்... அந்த ஒளியில் அவள் முகம் பிரகாசித்தது எனக்குள் ஒருவித மாயத்தை உண்டு செய்தது... மெல்லிய வெளிச்சம்., காதல் செய்வதற்கு உகந்த தருணம்... இது புரியாமல் ஜடம் போல் அமர்ந்திருந்தால் எந்தன் கண் மீது கண் பாராமல்... யார் கண்டார்கள்.. ஒரு வேளை என்னை போல் அவளும் எண்ணி இருக்கலாம், எனது வருகைக்காக காத்திருக்கலாம்... ஒன்றும் புரியவில்லை... மௌனம்... நிசப்தம்.... மெழுகுவர்த்தி வெளிச்சம்...
போர் மிகவும் பயங்கரமானது...
அனால்.,
அமைதி அதை விட பயங்கரமானது...
எதற்காவது என்னுடன்,
மீண்டும் சண்டை போட மாட்டாளா...?
என் அன்புக்காதலி..!
அப்படியாவது..,
என்னுடன் பேச மாட்டாளா?
எதோ போல் இருந்தது...
அவளின் அமைதி.. இந்த மௌனம்...
என்னை என்னவோ செய்தது...
இப்படியே தொடர்ந்தால்...
மௌனம் விரைத்து,
எங்களிடையே ஒரு பனிச்சுவரை எழுப்பிவிடும்...
இதையெண்ணி மிகவும் பயந்து போனேன் நான்..
மெல்லிய வெளிச்சத்தில்...
சில்வண்டுகளின் மெல்லிய சத்தம்,
அது கூட இசையகதான் பட்டது எனக்கு..
நேரத்தை வீணாக்க விரும்பவில்லை நான்...
மெல்ல அவள் அருகில் சென்றேன்,
என் கரங்கள் கொண்டு அவள் முகத்தை,
எனை நோக்கி திருப்பினேன்..
ஒரு சிணுங்கலுடன் திரும்பிக்கொண்டால்...
நான் சிரித்துவிட்டேன்...
அவள் முறைத்தால்...
மீண்டும் அதே நிகழ்வு...
நான் பேசினேன்.,
எனது குரல் ஒரு சுத்துயலை போன்றது..,
மெதுவாய் எழும்பிய பனிச்சுவரை
பொடிப்பொடியாக்கியது ...
மீண்டும் ஒரு சண்டை செல்லமாக..,
அறை முழுதும் எங்களில் சிரிப்பொலி...
எனது மடிமீது அவள்..
நிறைய பேசினோம்...
மின்சாரம் திரும்பிய நேரம்.,
எங்களுக்குள் மின்சாரம் பாய்ந்த நேரம்.,
எனவே...
விளக்குகள் அனைகபட்டன..!
காதல்ல்ல்லல்ல்ல்ல் முற்றியது....
இத்துடன் கதையும் முற்றுயது....
எண்ணமும் எழுத்தும் >>ஷதீஸ் பழனி<<