மழையழகி.,
உன்னை ரசித்துக்கொண்டே இருப்பேனடி...!
இலை நுனியில் ஒரு துளி உலகமாய்
நீ எடுத்த அவதாரம் அழகு;
தெருவினில் சிறுவர்கள் கப்பல் விட்டு மகிழ
சிறு நதி செய்தாய்- அது அழகு;
கல்லூரிக் காலத்தில்
அவளது குடையின் கீழ் தஞ்சம் தரச்செய்தாய்
கோடி அழகு, அது உந்தன் கொடை அழகு;
சேர் நிரம்பிய சாலை அழகு;
சன்னல் ஓரச் சாரல் அழகு;
கேடயம் தூக்கும் காளான்படை அழகு;
பறவையில்லா வானம் சிறு திரிஷ்ட்டிப்பொட்டோ..?
அவளின் கொலுசொலியை நினைவூட்டும்
ஜல் ஜல் சப்தம் அழகு;
கொடியிலிருக்கும் துணியை
அவசர அவசரமாய் அள்ளிச்செல்லும் தாவணிப்பெண்
அழகோ அழகு;
முதல்த்துளி
காதலியின் இதழில் முத்தமிட்டு
சந்தோசத்தில் துள்ளித்தெறிக்கும் நொடி அழகு;
குடிசைக்கூரை வழி
எட்டிப்பார்க்கும் விறகடுப்புப் புகை அழகு;
மேகம் அழகு;
மின்னல் அழகு;
இடித்தாளம் அழகு;
மண்வாசம் அழகு;
மேகத்தின் மை பூசிய வேஷம் அழகு;
முழுமையும் அழகு;
முற்றிலும் அழகு;
மொத்தத்தில்
நீயென்றால்
தனிஅழகு;
எந்தன் ஏகாந்த மழையழகி...!
எண்ணமும் எழுத்தும் >>ஷதீஸ் பழனி<<