கடுந்துயில் நீத்து
மெல்ல பூவிழி திறக்கும்
மாமஞ்சள் நிறத்தொரு ரோஜா நான்,
முட்கள் எனும் பச்சிளம் மீசையை நினைத்து
பயந்து போயிட்ட மதன காண்டீப ரோஜா நான்,
காரணம்...
காதலி வந்து கனிவுடன் பறித்திட
பொன்விரல்களை ஒருக்குமோவென் பச்சிளம் ஆண்மை..??
அய்யஹோ...
கலங்கி வெரித்திட்டேன்,
கதிரவன் தான் நகைத்திட்டான்;
கேலிநகையால் கோபமுற்று காற்றுடன் தான் முறையிட்டேன்
என் முகம் திருப்ப உதவி வேண்டி;
ஒப்புக்கொண்ட காற்றுக்கன்னி
எனை குதுகலமாய் குலுக்கிச்சென்றால்
ஆஹா...
என் குடியிருப்பு தோட்டம் நோக்கி வந்தால் என் காதல் தேவதை,
மதன வதன மாமஞ்சரி
'இன்று எப்படியாவது அவளது சுந்தரக்குழலை தழுவி,
நுகர்ந்து என் பிறவிப்பயனை எய்துவிடுவேன்'
என மாருதட்டிக்கொண்டேன் நான்;
என்னை நோக்கி வந்தவள்
என்னை விடுத்து எவனையோ பறித்து சூடிக்கொண்டால்;
அய்யஹோ, என் தேவதேவி
உன் கூந்தல் தழுவ இன்னும் நான் எத்தனை பிறவி தான் எடுக்க வேண்டும்..??