"மழையழகி"

மழையழகி.,
உன்னை ரசித்துக்கொண்டே இருப்பேனடி...!
இலை நுனியில் ஒரு துளி உலகமாய்
நீ எடுத்த அவதாரம் அழகு;
தெருவினில் சிறுவர்கள் கப்பல் விட்டு மகிழ
சிறு நதி செய்தாய்- அது அழகு;
கல்லூரிக் காலத்தில் 
அவளது குடையின் கீழ் தஞ்சம் தரச்செய்தாய் 
கோடி அழகு, அது உந்தன் கொடை அழகு;
சேர் நிரம்பிய சாலை அழகு;
சன்னல் ஓரச் சாரல் அழகு; 
கேடயம் தூக்கும் காளான்படை அழகு;
பறவையில்லா வானம் சிறு திரிஷ்ட்டிப்பொட்டோ..?
அவளின் கொலுசொலியை நினைவூட்டும்
ஜல் ஜல் சப்தம் அழகு;
 
கொடியிலிருக்கும் துணியை
அவசர அவசரமாய் அள்ளிச்செல்லும் தாவணிப்பெண்
அழகோ அழகு;
முதல்த்துளி 
காதலியின் இதழில் முத்தமிட்டு
சந்தோசத்தில் துள்ளித்தெறிக்கும் நொடி அழகு;  
குடிசை
க்கூரை வழி 
எட்டிப்பார்க்கும் விறகடுப்புப் புகை அழகு;  
மேகம் அழகு;
மின்னல் அழகு;
இடித்தாளம் அழகு; 

மண்வாசம் அழகு;
மேகத்தின் மை பூசிய வேஷம் அழகு;
 
முழுமையும் அழகு;
முற்றிலும் அழகு;

மொத்தத்தில்  
நீயென்றால்
தனிஅழகு;
எந்தன்
ஏகாந்த மழையழகி...!

 எண்ணமும் எழுத்தும் >>தீஸ் பழனி<<

12 comments:

viswanathan November 13, 2010 at 6:58 AM  

sema ya iruku jung.......

தீயஷக்தி... November 13, 2010 at 7:01 AM  

nandri jung...

D'ban!!! November 13, 2010 at 7:05 AM  

veryy nicee kalakkall!! its a good inspirationn!

Ahamed irshad November 13, 2010 at 7:12 AM  

ம‌ழையில் நனைந்த‌ ச‌ந்தோஷ‌ம்.. மிக‌வும் அருமை ந‌ண்ப‌ரே...

//கேடயம் தூக்கும் காளான்படை அழகு;
பறவையில்லா வானம் சிறு திரிஷ்ட்டிப்பொட்டோ..?
அவளின் கொலுசொலியை நினைவூட்டும்
ஜல் ஜல் சப்தம் அழகு//

ர‌சிச்ச‌ வ‌ரி...

தீயஷக்தி... November 13, 2010 at 7:38 AM  

D'ban!!!@ thanks a lott bro...
irshad@ mikka nandri bro... :-)

Unknown November 13, 2010 at 8:35 AM  

//SEma

கேடயம் தூக்கும் காளான்படை அழகு;

//Nalla karppanai :
குடிசைக்கூரை வழி
எட்டிப்பார்க்கும் விறகடுப்புப் புகை அழகு;



// kavidhai azhagu :
முழுமையும் அழகு;
முற்றிலும் அழகு;
மொத்தத்தில்
தனிஅழகு;

Karthik ThE PeRfEcTiOnIsT November 13, 2010 at 9:09 AM  

கல்லூரிக் காலத்தில்
அவளது குடையின் கீழ் தஞ்சம் தரச்செய்தாய்
கோடி அழகு...
முதல்த்துளி
காதலியின் இதழில் முத்தமிட்டு
சந்தோசத்தில் துள்ளித்தெறிக்கும் நொடி அழகு...

ஒரு சில வரிகள் மட்டுமே எழுதியப் பொழுது உணர்ந்த தாகத்தை படிக்கும் பொழுதும் உண்டாக்கும்...

தோழர்கள் சொல்வதுப் போல இவை ஒன்றும் கற்பனை அல்ல, உன்னதமான உணர்ச்சியின் ஆழம்...வாழ்த்துக்கள்...

தீயஷக்தி... November 13, 2010 at 9:32 AM  

கார்த்தி & பிரபா@ கோடி முறை நன்றி நண்பா.... மிக்க மகிழ்ச்சியா இருக்கு...tanxalotttttttyaaa

Ahamed irshad November 15, 2010 at 8:53 PM  

http://blogintamil.blogspot.com/2010/11/blog-post_16.html

பனித்துளி சங்கர் November 17, 2010 at 11:07 PM  

மழையாகி என்ற தலைப்பில் கவிதை மழை பொலிந்து என் உள்ளம் முழுவதையும் நனைத்து சென்றது உங்களின் வார்த்தைகள் . அருமை . தொடர்ந்து எழுதுங்கள் மீண்டும் வருவேன்

தீயஷக்தி... November 18, 2010 at 8:46 AM  

உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி அண்ணா... "வாங்கோ வாங்கோ"

தீயஷக்தி... November 24, 2010 at 4:32 AM  

அறிமுகப்படுத்தியமைக்கு கோடான கோடி நன்றிகள் அஹமது அண்ணா...

Post a Comment

Golden words...

"Wen is c able 2 cum in ma dream n stop ma temporary death..?? y is c refusin 2 cum in ma lyf n stop ma permanent death...??"
-Sathish Chakravarthy...

காலச்சுழற்சி...

வழிப்போக்கர்கள்......

Tamil Blogs & Sites
Tamil 10 top sites [www.tamil10 .com ]
copyrighted to sathish palani ® █║▌│█║▌│█││█║▌║.... Powered by Blogger.